உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

 பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சொத்தில் பங்கு கேட்டு பெண்ணைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் அடுத்த திருப்பச்சாவடிமேடைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் மனைவி எல்லம்மாள், 41; இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 1ம் தேதி கொளஞ்சியப்பன் இறந்தார். அவரது பெயரில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் பங்கு கேட்டு, ஏற்கனவே பிரிந்து சென்ற கொளஞ்சியப்பனின் முதல் மனைவி புஷ்பலதா மற்றும் அவரது பிள்ளைகள், சொத்தில் பங்கு கேட்டு எல்லம்மாளை திட்டி, தாக்கினர். இதுகுறித்து எல்லம்மாள் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், புஷ்பலதா உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை