உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பணம் பிரச்னையில் வாலிபரை தாக்கிய ஆசாமி மீது வழக்கு

 பணம் பிரச்னையில் வாலிபரை தாக்கிய ஆசாமி மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்திம் பணம் பிரச்னையில் வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். விழுப்புரம் கே.கே., ரோடு, மணி நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 26; இவரது தாய் ரேகா, வி.மருதுார் பகுதியை சேர்ந்த சற்குணம் என்பவரிடம் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தில் ரூ. 8 ஆயிரம் திருப்பி தந்த நிலையில், மீதம் ரூ. 2 ஆயிரம் தர வேண்டியிருந்தது. இந்த நிலையில், மீத பணத்தை சற்குணத்தின் பேரன் பாலாஜி, 25; நேற்று முன்தினம் விக்னேஷிடம் கேட்டு பிரச்னை செய்ததோடு, திட்டி தாக்கியுள்ளார். விழுப்புரம் தாலுகா போலீசார் பாலாஜி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை