உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

திருவெண்ணைநல்லூர்: திருவெண்ணைநல்லூர் மங்களாம்பிகை சமையத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தொடர்ந்து இரவு ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் அறிவழகன்,பேரூராட்சி சேர்மன் அஞ்சகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி உட்பட ஏராளமனோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை