உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுடுநீர் கொட்டி குழந்தை சாவு

சுடுநீர் கொட்டி குழந்தை சாவு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சுடுநீர் கொட்டி ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 32; இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு, 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். கடந்த 21ம் தேதி மகன் திஷான், 1; வீட்டில் குளிப்பதற்காக வைத்திருந்த வெண்ணீரை சாய்த்து மேலே ஊற்றி கொண்டார்.இதில் பலத்த காயம் அடைந்த திஷான், புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு நேற்று அதிகாலை 6:00 மணியளவில் இறந்தான். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை