உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  குழந்தைகள் தின விழா

 குழந்தைகள் தின விழா

திண்டிவனம்: திண்டிவனம் ஜெ.ஆர்., இண்டர்நேஷனல் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு, பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன், முதல்வர் பானுமதி வெங்கடரமணன் ஆகியோர் தலைமை தாங்கினர். பரதம், நடனம், சிலம்பம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி ஆசிரியர்கள் மழலையர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் மழலையர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, சாணக்யா கல்விக் குழும தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் துணை தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். முதல்வர் அருள்மொழி வரவேற்றார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஆசிரியை ஷாலினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செஞ்சி என்.ஆர். பேட்டை அரசு துவக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் செந்தில், ஊராட்சி தலைவர் பிலால், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், வனக்குழு தலைவர் ராமு பங்கேற்றனர். செஞ்சி காந்தி பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் கார்த்திக், பொன்னம்பலம், சுமித்ரா சங்கர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஆயிஷா பேகம் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார். தி.மு.க., மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரசூல் பாஷா, தொண்டரணி அமைப்பாளர் பாஷா, நிர்வாகிகள் கோகுல், அறிவழகன், பிரபாகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை