உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் நிலையத்தில் கடை வழங்க வலியுறுத்தி தம்பதி தர்ணா

பஸ் நிலையத்தில் கடை வழங்க வலியுறுத்தி தம்பதி தர்ணா

விழுப்புரம், : செஞ்சி புதிய பஸ் நிலையத்தில் ஆவின் கடை வைப்பதற்கு அனுமதிக்க வலியுறுத்தி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தம்பதி தர்ணாவில் ஈடுபட்டனர்.செஞ்சி அடுத்த சக்கராபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ரமேஷ் அவரது மனைவி உமா மகேஸ்வரி. மாற்றுத் திறனாளிகள். இவர்கள், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்து, திடீரென கலெக்டர் கார் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:நாங்கள் சக்கராபுரத்தில் வசித்து வருகிறோம். இருவரும் மாற்றுத் திறனாளிகள். கடந்த 4 ஆண்டுகளாக புதிதாக கட்டப்பட்டு வந்த செஞ்சி புதிய பஸ் நிலையத்தில், எங்களுக்கு ஆவின் கடை வைப்பதற்கு அனுமதி கோரி வந்தோம்.கடந்த 6 மாதங்களாக அனைத்து துறைகளுக்கும் நாங்கள் மனு கொடுத்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இதனால் பல மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகினோம்.தற்போது, செஞ்சி புதிய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள கட்டடத்தில், முதல்வர் அறிவிப்பின்படி மாற்றுத் திறனாளிகளுக்கு வாடகை மற்றும் முன்பணம் விலக்கு அளித்து, ஒரு கடை ஒதுக்கி தருமாறு கேட்டு வருகிறோம்.நாளை (இன்று) ஏலம் விடுவதற்கு கடைசி நாள் என்பதால், எங்களுக்கு கடை ஒதுக்காத பட்சத்தில், எங்களை குடும்பத்தோடு கருணை கொலை செய்து விடுங்கள். இல்லையெனில் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இருவரும் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி