உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கடலூர், சிதம்பரம் ரயில் நிலையங்களில் திருச்சி மண்டல மேலாளர் ஆய்வு

கடலூர், சிதம்பரம் ரயில் நிலையங்களில் திருச்சி மண்டல மேலாளர் ஆய்வு

கடலூர்:''கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளம் மக்களுக்காக மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி கொடுத்தால் நடைமேடை அமைத்துக் கொடுக்கப்படும்'' என திருச்சி மண்டல மேலாளர் தெரிவித்தார்.ரயில்வே துறையின் திருச்சி மண்டல மேலாளர் வைத்திலிங்கம் நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார்.ரயில்வே நிர்வாகத்திற்குச் சொந்தமான ஸ்டேஷன் எதிரே உள்ள இடங்களை பார்வையிட்டு அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாடகை வேன்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.மேலும் ரயில்வே ஸ்டேஷனில் பொதுமக்களுக்கான வசதிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு உள்ள காலி இடங்களை சுத்தம் செய்து பூங்கா அமைக்கப்படும்.பயணிகளுக்கு ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம் குறித்த எலக்ட்ரானிக் அறிவிப்பு முறை கொண்டு வரப்படும்.தற்போது டிக்கெட் கொடுக்கும் இடத்தில் அதிகளவில் பயணிகள் வராததால் மீண்டும் (தற்போது முன்பதிவு செய்யும் இடம்) பழைய இடத்திற்கு மாற்றப்படும்.குப்பங்குளம் பகுதியில் மக்களின் வசதிக்காக தனது தொகுதி நிதி ஒதுக்கீட்டில் நடைமேடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அழகிரி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார். இதனை நிறைவேற்ற ஒரு பகுதியில் போதுமான இடம் இல்லை. மாவட்ட நிர்வாகம் தனியாரிடத்தில் இடம் பெற்றுத் தந்தால் ரயில்வே நிர்வாகம் நடைமேடை அமைக்க நடவடிக்கை எடுக்கும்.மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி, நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் துண்டிப்பு பணிகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் அப்ரோச் சாலைக்கான இடங்கள் காட்டப்பாட்டால் ரயில்வே சுரங்கப்பøõத பணியை தொடங்குவோம்.இவ்வாறு திருச்சி மண்டல மேலாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.சிதம்பரம்: இதனைத் தொடர்ந்து சிதம்பரம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்த அவர் பயணிகள் ஓய்வு அறை மற்றும் தங்கும் அறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.ரயில் நிலைய நுழைவு வாயிலில் பெயர் பலகையை பெரிதாக வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டர்.பின்னர் நிருபர்களிடம், 'கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வரை சோதனை ரயில், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு கூடுதல் ரயில் விடுவது, புவனேஸ்வர் ரயில் சிதம்பரத்தில் நின்று செல்வது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்த உடன் இயக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை