உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பால் வளத்துறை ஆணையர் ஆய்வு

 பால் வளத்துறை ஆணையர் ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க குளிரூட்டும் மையத்தில் ஆணையர் ஆய்வு செய்தார். சென்னை பால்வளத்துறை ஆணையர் ஜான் லுாயிஸ் நேற்று விக்கிரவாண்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலகம் மற்றும் பால் குளிரூட்டும் மையத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பால் வாங்கும் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடம் பால் உற்பத்தி அதிகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். விழுப்புரம் துணை பதிவாளர் கலா, ஆவின் பொது மேலாளர் ராஜேஷ், உதவி பொது மேலாளர் பானுமதி, கூட்டுறவு சார் பதிவாளர் அரிரங்கன், முதுநிலை ஆய்வாளர் சிவராஜ், ஜெயந்தி, விரிவாக்க அலுவலர் மகேஸ்வரி, சங்க செயலாளர் ராணி பச்சைக்கிளி, மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் அரிகரன் மற்றும் முகவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி