| ADDED : டிச 05, 2025 06:25 AM
செஞ்சி: செஞ்சிக்கு இன்று வருகை தரும் துணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பளிக்க கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திராளாக வரவேண்டும் என மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார். அவரது அறிக்கை: விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி சட்ட சபை தொகுதியைச் சேர்ந்த கிளை செயலாளர்கள், பேரூராட்சி வார்டு செயலாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 3:00 மணிக்கு ஊராணித்தாங்கல் சஞ்சனா பேலஸ் திருமண மண்டபத்தில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கிறது. இதில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று ஆலோசனை வழங்க வருகை தர உள்ளார். அவருக்கு செஞ்சி பயணியர் விடுதி எதிரே வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு, பொதுக்குழு, உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் என அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.