உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில் முன்பதிவுக்கு டிஜிட்டல் பே : பயணிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு

ரயில் முன்பதிவுக்கு டிஜிட்டல் பே : பயணிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுன்டரில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்படி கூறிய ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் ரயில் நிலையத்தில், பயணிகள் வசதிக்காக பொது டிக்கெட் கவுண்டர்கள், முன்பதிவு மற்றும் தட்கல் கவுன்டர்கள் உள்ளது. இதில், முன்பதிவு கவுண்டரில் பணமாக பெற்று வந்த நிலையில், திடீரென டிஜிட்டல் பேமண்ட் மட்டுமே வாங்க வேண்டும் என தெற்கு ரயில்வே வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.நேற்று காலை 11:00 மணி முதல் முன்பதிவு கவுன்டரில் டிக்கெட் வாங்க வந்த பயணிகளிடம், ஊழியர்கள் டிஜிட்டல் பேமண்ட் முறையில் பணம் செலுத்தும்படி கூறினர்.இதனால் ஆவேசமடைந்த பயணிகள், டிஜிட்டல் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அரசாணையை காட்டும்படி, ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.மேலும், டிஜிட்டல் முறையில் கல்வியறிவு இல்லாதோரும், இணையதள வசதியை பயன்படுத்த தெரியாதவர்கள் எப்படி ரயில் முன்பதிவு டிக்கெட் பெற முடியும் என கேள்வி எழுப்பினர்.உடன், ரயில்வே அதிகாரிகள் அவர்களிடம் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பயணிகள் டிக்கெட் பெற்றுச் சென்றனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ