உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் மோதியதில் பள்ளி மாணவி பலி

பஸ் மோதியதில் பள்ளி மாணவி பலி

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே அரசு பஸ் மோதியதில் பள்ளி மாணவி இறந்தார்.திருக்கோவிலூர் அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகள் ஆர்த்தி,12. இவர் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு சடக்கட்டி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்காக தனது தாயுடன் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். விருத்தாசலத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று சாலையோரம் சென்ற சிறுமி மீது மோதியது. பலத்த காயமடைந்த ஆர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்திப்பாக்கம், சடகட்டி கிராம மக்கள் வேகத் தடை அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி., லோகநாதன், இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை