உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு சீல்

மாவட்டத்தில் எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு சீல்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் 16ம் தேதி மாலை முதல், நடைமுறைக்கு வந்தது.மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு மற்றும் கண்காணிப்பு பணிகள் துவங்கியது.முதல் நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகங்கள், பேரூராட்சி, ஒன்றிய சேர்மன் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.கலெக்டர் அலுவலக வாயிலில் உள்ள விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தின் கதவு மற்றும் வாயில் பகுதி கதவுகள் நேற்று காலை மூடப்பட்டு தேர்தல் துணை தாசில்தார் உஷா மற்றும் வருவாய் ஆய்வாளர் ராபர்ட் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.இதே போல், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், திண்டிவனம், மயிலம், வானுார் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இ சேவை மையம் பாதிப்பு

விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் உள் பகுதியில், அரசின் இ சேவை மையம் இயங்கி வருகிறது. தற்போது, பூட்டி சீல் வைக்கப்பட்டதால், சான்றிதழ்கள் பெற இ-சேவை மையம் வரும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதனால், இ-சேவை மையத்தை மட்டும் திறந்து வைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்