உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர், அரசு பஸ் மோதி இறந்தார்.மத்தியபிரதேச மாநிலம், கோபால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சோட்டாலால் கோரி, 65; அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சுற்றுலா வந்துள்ளார். காஞ்சிபுரம் சென்று, ராமேஸ்வரம் செல்வதற்காக, நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில், திண்டிவனம் அடுத்த சலவாதி லாரி பார்க்கிங் பகுதியில் அனைவரும் சாப்பிட்டனர்.சாப்பிட்ட பின், சோட்டாலால் கோரி, சென்னை சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சோட்டாலால் கோரி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி