உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பெண் சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

 பெண் சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

விழுப்புரம்: புதுச்சேரி மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். மரக்காணம் தாலுகா, கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கருணாகி, 40; இவர், கடந்த அக்., 25ம் தேதி புதுச்சேரி மாநில 800 மதுபாட்டில்கள் மற்றும் 150 சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்தபோது, கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொ ருட்டு, சாராய தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, கலெக்டருக்கு, எஸ்.பி., சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில், வேலுார் மத்திய சிறையில் உள்ள கருணாகியை தடுப்பு காவலில் கைது செய்ததற்கான நகலை போலீசார் வழங்கி னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ