உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  புதிய மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திண்டிவனத்தில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்

 புதிய மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திண்டிவனத்தில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 2023ம் ஆண்டு, திண்டிவனம் மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டது. மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை உயர்த்தும் வகையில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித்துறை மூலம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், 5 மாடி கொண்ட கட்டடங்கள் கட்டும் பணி துவங்கியது. முதல் பிளாக் கட்டடத்தில், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 2வது பிளாக் கட்டடத்தில், அவரச சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ், இதய சிகிச்சை, தீக்காய சிகிச்சை, சி.டி. ஸ்கேன், தலைக்காய சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதில் மருத்துவமனையின் நுழைவுவாயில் பகுதியில், ஆர்ச் அமைக்கும் பணி, உள் பகுதியில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இறுதிக் கட்ட பணிகள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்குள் முடிவடைந்துவிடும். பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற பிறகு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். அதன் பிறகு திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும் என விழுப்புரம் சுகாதரத்துறை இணை இயக்குனர் லதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை