உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் சங்கர மடத்தில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

விழுப்புரம் சங்கர மடத்தில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் சங்கர மடத்தில் மகா பெரியவர் ஆராதனை விழா துவங்கியது.விழாவையொட்டி, நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து கல் வைத்த வாரம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, குரோம்பேட்டை, மடிப்பாக்கம், குமரன் குன்றம், காஞ்சிபுரம், திருக்கோவிலுார் அடுத்த பரனுார் உள்ளிட்ட வேத பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் வேதங்களின் தொகுப்பிலிருந்து மாணவர்களுக்கு தகுந்தாற்போல், பொதுமக்களில் ஒருவர், ஒரு எண்ணிக்கையை கூறியதும், அதற்கேற்ற வேதங்களை மனப்பாடமாக மாணவர்கள் ஒப்புவித்தனர்.இந்த போட்டியில் 60 மாணவர்கள் பங்கேற்றனர். சென்னையைச் சேர்ந்த சுப்ரமணியன், நாகு ஆகியோர் தலைமை தாங்கி, மாணவர்களை பாராட்டி பரிசளித்தனர்.ஏற்பாடுகளை விழுப்புரம் வேத பாடசாலை ஆசிரியர் சங்கரநாராயணன், சங்கர மடத்தின் மேலாளர் ராமமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை