உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  குட்கா பதுக்கியவர் கைது

 குட்கா பதுக்கியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் பெட்டிக் கடையில் குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை செய்தனர். அங்கு, குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. உடன், தங்கராசு, 60; இவரது மகன் ஆனந்தகுமார், 32; ஆகிய இருவர் வழக்குப் பதிந்து தங்கராசை கைது செய்தனர். மேலும், கடையில் இருந்த 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை