மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
3 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
3 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
3 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
3 hour(s) ago
விழுப்புரம் : பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள், பசுமை வீடுகள் மற்றும் பழங்குடியினர் வீடுகள் ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ஏற்படும் சந்தேகம், புகார்கள் மற்றும் திட்டம் சார்ந்த உதவிகளுக்கு உங்கள் உயர்விற்கு உதவி மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில், ஊரக வளர்ச்சி துறை மூலம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டி முடித்த 500 வீடுகளை, அமைச்சர் மஸ்தான் பயனாளிகளிடம் ஒப்படைத்துள்ளார்.தற்போது பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டிய 750 வீடுகளும், துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 500 கழிவறைகளையும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள், பசுமை வீடுகள், பழங்குடியினர் வீடுகுள் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள், புகார்கள், திட்டம் சார்ந்த உதவிகள் குறித்து அனைத்து வட்டாரங்களிலும் 'உங்கள் உயர்விற்கு உதவி மையம்' பெயரில் வீடுகளுக்கான சிறப்பு குறைதீர்வு மற்றும் உதவி மையம் அமைக்கப்படவுள்ளது.அனைத்து ஊரக குடியிருப்பு திட்ட வீடுகள் தொடர்பாக பயனாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு மாவட்ட அளவில் மொபைல் 9363372753, 9363443274 மூலம் தொடர்பு கொள்ளலாம். நிலுவை தொகை வழங்குதல், தொழில்நுட்ப சிக்கல்கள், நிலம், பட்டா தொடர்பான பிரச்னைகள், வங்கி கடன் தேவைகள், கட்டுமான பொருட்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்த சந்தேங்களை கேட்டு தெளிவு பெறலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago