உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

 வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின் றனர். விழுப்புரம், வண்டிமேட்டைச் சேர்ந்தவர் முகது இப்ராஹிம் மனைவி அபிதா பேகம், 47; இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிக்கொண்டு வெளியில் சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த ஐந்தே கால் சவரன் நகைகள், ஒரு வெள்ளி மோதிரம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி