உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  செஞ்சியில் கல்லுாரி கட்டடம் திறப்பு விழா

 செஞ்சியில் கல்லுாரி கட்டடம் திறப்பு விழா

செஞ்சி: செஞ்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். செஞ்சியை சுற்றி 300க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியுள்ள நிலையில், செஞ்சி பகுதியில் அரசு கலைக்கல்லுாரி வேண்டும் என 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து மஸ்தான் எம்.எல்.ஏ., விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2022ம் ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரில் செஞ்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதே ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டு தற்காலிகமாக செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்லுாரி இயங்கி வந்தது. இதற்காக செஞ்சி - விழுப்புரம் சாலையில் சிட்டாம்பூண்டி கிராமத்தில் 13.92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கல்லுாரியை திறந்து வைத்தார். தொடர்ந்து கல்லுாரியில் நடத்த விழாவிற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன்கள் மொக்தியார் அலி, முருகன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஸ்ரீவித்யா வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சிவா, மாவட்ட துணைச் சேர்மன் ஷிலா தேவி சேரன். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் முரளி, உதவி செயற் பொறியாளர், வெங்கடேசபாபு, துணை சேர்மன்கள் ஜெயபாலன், விஜயலட்சுமி முருகன். மாவட்ட கவுன்சிலர்கள் அரங் க ஏழுமலை, அகிலா பார்த்திபன், சாந்தி சுப்ரமணியன், செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் பனிமலர் ராஜாராமன், ஊராட்சி தலைவர் பச்சையப்பன் மற்றும் அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்த் துறைத் தலைவர் ஆனந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை