உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

 ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம், வண்டிமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் வட்டார அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. செயலாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். பொருளாளர் சையது ஜாபர் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில், விழுப்புரம், கொட்டப்பாகத்துவேலி, விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையில் உள்ள பள்ளிவாசல், விராட்டிக்குப்பம் பள்ளி வாசல், கீழ்பெரும்பாக்கம் மதினா நகர் பள்ளிவாசல், வானுார் அடுத்த பள்ளிவாசல்களில் உள்ள அடக்க ஸ்தலத்திற்கு சாலை, சுற்றுச்சுவர் மற்றும் மின்வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை, விழுப்புரம் மாவட்ட தி.மு.க., சிறுபான்மை அணி தலைவர் தாகீர், அமைப்பாளர் தமிமுன் அன்சாரி, நகர பொறுப்பாளர் வெற்றிவேல் ஆகியோரிடம் கூட்டமைப்பு நிர்வாகிகள் வழங்கினர். இவர்கள் மூலம் சிறுபான்மையினர் நலத்துறை கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை