உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காலபைரவர் சிலைகள் கடலில் வீச்சு: போலீசார் குழப்பம்; பொதுமக்கள் பீதி

காலபைரவர் சிலைகள் கடலில் வீச்சு: போலீசார் குழப்பம்; பொதுமக்கள் பீதி

மரக்காணம் : மரக்காணம் தீர்த்தவாரி கடலில், மர்ம நபர்கள் தொடர்ந்து காலபைரவர் சிலைகளை வீசி செல்வதால், மக்கள் பீதியில் உள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரையில் சில தினங்களுக்கு முன் 2 அடி உயரமுள்ள காலபைரவர் கற்சிலை கிடந்தது. தகவலறிந்த வருவாய் மற்றும் போலீசார் சிலையை மீட்டு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.அதன் பின் சில தினங்களில் அடுத்தடுத்து இரண்டு காலபைரவர் கற்சிலைகள் அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் வருவாய்துறை, போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் மீண்டும் இரண்டு காலபைரவர் கற்சிலையை தீர்த்தவாரி கடலில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'இரவு நேரத்தில் தீர்த்தவாரி கடற்கரையில் சிறிய வெளிச்சம் தெரியும். அப்போது சிலர் மந்திரங்கள் சொல்வார்கள். பின், கடலில் பொருட்களை வீசிவிட்டுச் செல்வார்கள். கடந்த சில தினங்களாக காலபைரவர் சிலை கடற்கரையில் கிடப்பதை பார்த்தால் மர்ம நபர்கள் மாந்திரீகத்திற்கு பயன்படுத்திவிட்டு சிலையை கடலில் வீசி சென்றிருக்கலாம்' என்றனர்.இதனால் விடுமுறை நாட்களில் தீர்த்தவாரி கடற்கரைக்கு வரும் மக்கள் பீதியில் உள்ளனர். அந்த பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்கள் இருந்தும் போலீசார் ஆய்வு செய்யாமல் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை