| ADDED : பிப் 01, 2024 05:35 AM
விழுப்புரம்: கோலியனூர் வாலீஸ்வரர் கோவிலில் இன்று (பிப்.1) கும்பாபிஷேகம் நடக்கிறது.விழுப்புரம் அடுத்த கோலியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற ப்ரஹன்நாயகி சமேத வாலீஸ்வரர் கோவிலில், ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேக விழா இன்று (பிப்.1) இன்று நடக்கிறது.கும்பாபிஷேக விழா, கடந்த 29ம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, மகா கணபதி, மகாலட்சுமி, நவகிரக ஹோமங்களும், தீபாரதனையும், மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும் நடந்தது. நேற்று 31ம் தேதி காலை 7 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை தொடங்கி நடந்தது. மாலை 5.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும் நடந்தது.தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், விசேஷ திரவிய ஹோமங்களும், தீபாரதனையும் நடக்கிறது. காலை 9 மணிக்கு கடம் புறப்பாடாகி புனித நீர் கொண்டுவரப்பட்டு, காலை 9.30 மணிக்கு மேல் வாலீஸ்வரர் கோவில் விமானம் மற்றும் பரிவார சன்னதிகளில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. கோலியனூர் சிவஞானம் தலைமையில், ஆலய விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.