மேலும் செய்திகள்
போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை
5 hour(s) ago
விழுப்புரம் : லோக்சபா தேர்தலை யொட்டி, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொதுமக்களிடம் நுாறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்புவதற்கான அதிநவீன மின்னணு வாகனம் துவக்க விழா நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அதிநவின மின்னணு வாகனத்தை, தேர்தல் செலவின பார்வையாளர் சித்தரஞ்சன் தாங்கடா மஜ்ஹி, மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த வாகனம் தினந்தோறும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு சென்று ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் திரையிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.
5 hour(s) ago