உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எம்.எல்.ஏ., உளறல் பேச்சின் உள்நோக்கம் என்ன?

எம்.எல்.ஏ., உளறல் பேச்சின் உள்நோக்கம் என்ன?

திண்டிவனம் நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் சில தினங்களுக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் நடந்தது.ஆர்பாட்டத்திற்கு, 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது வரவேற்று பேசிய திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரனை கொள்கை பரப்பு செயலாளர் என தவறாக குறிப்பிட்டு பேசினார். அதனைத் தொடர்ந்து, வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணியை மாநிலங்களவை உறுப்பினர், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் என உளறி கொட்டினார்.இதனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனே 'மாஜி' அமைச்சர் சண்முகம் எம்.எல்.ஏ., அர்ஜூனனை கண் அசைவால் கண்டித்தார்.அதை கவனிக்காதது போல் காமெடி செய்து பேசியது போல் சிரித்துக் கொண்டார். இது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன் வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி முன்னாள் அமைச்சர் சண்முகத்தை சந்தித்து விழுப்புரம் எம்.பி., தொகுதி சீட்டை தன் மகனுக்கு ஓதுக்கும்படி கேட்டுள்ளார்.இதனை விமர்சிக்கும் விதத்தில் சக்கரபாணியை மாநிலங்களவை உறுப்பினர் என பேசியதாக சக்கரபாணியின் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை