உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி திடலில், தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீசிய வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி, நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணி நிறுவன தலைவர் வேலுமூர்த்தி தலைமை தாங்கினார். அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் ஸ்ரீரங்கன்பிரகாஷ், அம்பேத்கர் மக்கள் கட்சி மாநில தலைவர் மழைமேனி பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை