உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவேகானந்தா கல்லுாரியில் தேசிய இளைஞர் தின விழா

விவேகானந்தா கல்லுாரியில் தேசிய இளைஞர் தின விழா

விழுப்புரம் : ஒரத்துார் சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 162வது தேசிய இளைஞர் தின விழா நடந்தது.கல்லுாரி தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் கெஜலட்சுமி வரவேற்றார். ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் செயலாளர் பரமசுகானந்தர் மகராஜ், மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., சுரேஷ், சிறப்புரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 25 பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார். ஊராட்சி தலைவர் லதா பிரபு, ரோட்டரி சங்கத் தலைவர் ரமேஷ்குமார் வாழ்த்திப் பேசினார். தமிழ்த் துறைத் தலை வர் சுமதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ஜெயம் அறக்கட்டளை அறங்காவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.வணிகவியல் துறைத் தலைவர் ஜெரினா பேகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை