உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  திண்டிவனத்தில் ரூ.5.58 கோடியில் புதிய தீயணைப்பு நிலையம்

 திண்டிவனத்தில் ரூ.5.58 கோடியில் புதிய தீயணைப்பு நிலையம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் தீயணைப்பு நிலையம் 5.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிக்காக பழைய கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது. திண்டிவனம் - புதுச்சேரி சாலையில், திண்டிவனம் தீயணைப்பு நிலைய கட்டடம் கடந்த 1968ல் கட்டப்பட்டு இயங்கி வந்தது. தற்போது கட்டடத்தின் உறுதித்தன்மை வலுவிழந்தது. இதையொட்டி, அரசு சார்பில் திண்டிவனம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட 5.58 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது. தொடர்ந்து, திண்டிவனத்தில் செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையம், தற்காலிகமாக ஜெயபுரத்தில் உள்ள காவல் குடியிருப்பு வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், தீயணைப்பு நிலையத்தின் பழைய கட்டடத்தை இடிக்கும் பணி துவங்கியது. காவலர் வீட்டு வசதி கழத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய தீயணைப்பு நிலையத்தின் பணிகளை 11 மாதங்களுக்கு முடித்து கொடுக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தீ விபத்து மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் 04147-222101 மற்றும் 9445086495 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு, நிலைய அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை