மேலும் செய்திகள்
தலை மறைவு குற்றவாளி கைது
8 hour(s) ago
வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்
8 hour(s) ago
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
8 hour(s) ago
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைத்துதரக் கோரி நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கூட்ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாலத்தின் தெற்கு பகுதியில் அரசூர் பாரதி நகர் அமைந்துள்ளது. அதற்கு எதிர் திசையில், அரசூர் ஏரி, வீரன் கோவில் மற்றும் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இப்பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்,காந்தலவாடி, மாமந்துார், சித்தானங்கூர், அரும்பட்டு கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அன்றாட தேவைக்கு வெளியூர் செல்வோர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் விபத்தை தவிர்க்க அரசூர் பாரதிநகர் மற்றும் இருவேல்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் தரைப்பாலம் அமைக்கக் கோரி, இந்திய குடியரசு கட்சி நேற்று மறியல் போராட்டம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக தாசில்தார் ராஜ்குமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன், நகாய் புலப் பொறியாளர், குடிமைப் பொறியாளர் முன்னிலையில் நேற்று முன்தினம் மாலை தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.கூட்டத்தில், நகாய் பொறியாளர்கள் கூறுகையில், உங்களின் கருத்துக்கள், துறை திட்ட இயக்குனரிடம் தெரிவித்து, வரும் 15ம் தேதிக்குள் தீர்வு காணப்படும். அதுவரை மேம்பாலம் தெற்கு பகுதியில் நடைபெறும் பாலம் பணி நிறுத்தி வைக்கப்டும். வடக்குப்பகுதியில் பணிகள் தொடர்ந்து நடைபெறும்' என்றார்.இதையடுத்து நேற்று நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அரசூர் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago