உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

திண்டிவனம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில் முதியவர் ரயிலில் சிக்கி இறந்தார்.திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்தவர் தேவராஜ், 67; மாற்றுத்திறனாளி. இவர் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில் பாதையை கடக்க முயன்றார்.அப்போது, விழுப்புரத்திலிருந்து மேல்மருவத்துார் சென்ற யூனிட் ரயில் மோதியதில் தேவராஜ் இறந்தார்.ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ