உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காவேரிப்பாக்கம் வழி திறப்பு; எம்.எல்.ஏ., கோரிக்கை ஏற்பு

காவேரிப்பாக்கம் வழி திறப்பு; எம்.எல்.ஏ., கோரிக்கை ஏற்பு

திண்டிவனம் : திண்டிவனத்தில் காவேரிப்பாக்கம் வழி, எம்.எல்.ஏ.,கோரிக்கையை ஏற்று, ரயில்வே நிர்வாகம் நேற்று மாலை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தது.திண்டிவனம் மேம்பாலம் சீரமைப்பு பணி மற்றும் நேரு வீதியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் 2 பணிகளும் நடப்பதால், நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தால் அடைக்கப்பட்டுள்ள காவேரிப்பாக்கம் தரைப்பாலம் அருகே உள்ள வழியை திறந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதை வலியுறுத்தி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதுகுறித்து, கடந்த 16ம் தேதி அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் திண்டிவனம் ரயில் நிலைய மேலாளர், ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரை சந்தித்து, மேம்பாலம் சீரமைப்பு பணி முடியும் வரை காவேரிப்பாக்கம் வழியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட கோரிக்கை வைத்தார்.அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5:30 மணியளவில் ரயில் நிலைய மேலாளர் ராம்கேஷ் மீனா, பொறியாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில், மூடப்பட்டிருந்த காவேரிப்பாக்கம் வழி பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.திண்டிவனம் முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், கார்த்திக், சரவணன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி