| ADDED : நவ 20, 2025 05:33 AM
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி பூங்காவில் வளர்ந்துள்ள புல், செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், 7 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள், சிறுவர்கள் விளையாட சறுக்கு, ஊஞ்சல் மற்றும் கிரிக்கெட் பயிற்சி, நடைப்பயிற்சி பாதை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கு விழுப்புரம் நகராட்சியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுடன் பொழுதுபோக்கி வருகின்றனர். மேலும், ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொண்டும், அரசு போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்கள், பெண்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பூங்காவில் தற்போது அதிகளவில் புல், செடிகள் வளர்ந்துள்ளன. இதில், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, பூங்காவில் அதிகளவில் வளர்ந்துள்ள புல், செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.