| ADDED : நவ 13, 2025 06:58 AM
விழுப்புரம்: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில், திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். மண்டல அளவில் பல போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளது.திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கோ-கோ போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், இரண்டாமிடம் பிடித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் சிவஸ்ரீ, ஜானவி, பவிஷா, மைத்ரா தேவி, அபிநயா, தனஸ்ரீ, உபஸ்ரீ, வர்ஷா, கீர்த்தனா மற்றும் ஹாசினி, ஷீரின், ஆகியோருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதிபெற்ற இம்மாணவிகளுக்கு, பள்ளியின் தாளாளர் வாசுதேவன் பதக்கம் அணிவித்து பாராட்டினார். பள்ளின் உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் சுகன்யா, முத்து ஆகியோர் உடனிருந்தனர்.