| ADDED : ஜன 23, 2024 11:36 PM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது.விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த கண்காட்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி, சட்டம் சார்ந்த விழிப் புணர்வு புகைப்படங்களை பார்வையிட்டார்.கண்காட்சியில், எஸ்.சி., - எஸ்.டி., வழக்கு களை விசாரிக்கும் மாவட்ட சிறப்பு நீதிபதி பாக்கியஜோதி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிபதி வெங்கடேசன், கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜசிம்மாவர்மன், முதன்மை சார்பு நீதிபதி ஜெயப்பிரகாஷ், முதன்மை நீதித்துறை நடுவர் புஷ்பராணி, கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்ச்செல்வன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபத்ரா, நீதித்துறை நடுவர் (1) ராதிகா மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.கண்காட்சியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.ஏற்பாடுகளை சார்பு நீதிபதி ஜெயப்பிரகாஷ் மேற்பார்வையில் நிர்வாக உதவியாளர்கள், தன்னார்வ உறுப்பினர்கள் செய்தனர்.