உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அகில இந்திய கராத்தே போட்டி வென்ற போலீசுக்கு பாராட்டு

அகில இந்திய கராத்தே போட்டி வென்ற போலீசுக்கு பாராட்டு

விழுப்புரம்: அகில இந்திய அளவில் போலீசாருக்கான விளையாட்டு போட்டி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது. கடந்த 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடந்த போட்டியில், தமிழகத்தில் இருந்து பல மாவட்டங்களை சேர்ந்த போலீசார், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில், கராத்தே போட்டியில் பங்கேற்ற விழுப்புரம் ஆயுதப்படை முதல்நிலை காவலர் வருண்குமார், 3வது இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். பரிசு பெற்று விழுப்புரம் மாவடத்திற்கு பெருமை சேர்த்த காவலர் வருண்குமாரை, எஸ்.பி., சரவணன் நேரில் சந்தித்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை