உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சீனிவாசப் பெருமாள் கோவிலில் காணும் பொங்கல் திருவிழா

சீனிவாசப் பெருமாள் கோவிலில் காணும் பொங்கல் திருவிழா

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் காணும் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று காணும் பொங்களையொட்டி திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பணமாலை, வடைமாலை மற்றும் நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, திணை, சாமை, இளநீர், கிழங்கு உள்ளிட்ட பொருட்களை சூறை விட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்பு சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் புலி, சிங்கம், போலீஸ், திருடன் உள்ளிட்ட வேடமணிந்து ஆடினர். விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை