உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாதாபுரம் அருகே ரூ.5 கோடியில் பெட்டி வடிவ பாலம் அமைக்க பூஜை

தாதாபுரம் அருகே ரூ.5 கோடியில் பெட்டி வடிவ பாலம் அமைக்க பூஜை

திண்டிவனம்:ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் தாதாபுரம் அருகே 5 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்டி வடிவ பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாதாபுரம் - அம்மனப்பாக்கம் பகுதியில் 5 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் பெட்டி வடிவ பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி பூமி பூஜையை நடத்தி பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணைச் சேர்மன் ராஜாராம், மாவட்ட தி.மு.க., அவைத் தலைவர் சேகர், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, விஜயபாஸ்கர்.நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, திண்டிவனம் உதவி கோட்ட பொறியாளர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை