உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்விரோத  மோதல்: 3 பெண்கள் கைது 

முன்விரோத  மோதல்: 3 பெண்கள் கைது 

விக்கிரவாண்டி: தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி 67; இவருக்கும் எதிர்வீட்டை சேர்ந்த உறவினர் சசிகலா,35: என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. கடந்த 20ம் தேதி, லட்சுமி வீட்டு வாசற்படியில் சாணம் தெளித்த போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, குழுவாக தாக்கி கொண்டனர். இதில் லட்சுமி, சசிகலா இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மோதல் தொடர்பாக இரு தரப்பினரும், விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இருதரப்பு சேர்ந்த, 8 பேர் மீது வழக்குப்பதிந்து லட்சுமி, 67; சசிகலா, 35; விசாலாட்சி, 47; ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை