உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  முன்விரோத தகராறு :ஒருவர் மீது வழக்கு

 முன்விரோத தகராறு :ஒருவர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் 2 பேரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் பரத், 20; இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கலைச்செல்வனின் ஷேர் ஆட்டோவுக்கு தீ வைத்தது தொடர்பாக, கடந்த நவம்பர் 1ம் தேதி பரத் மீது, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கலைச்செல்வன், விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் நின்றிருந்த பரத்தையும், அவரது நண்பரான குமரேசனையும், 28; திட்டி, தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கலைச்செலவன் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி