| ADDED : டிச 26, 2025 05:57 AM
மயிலம்: மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதையும், இதற்கான நிதியை 40 சதவீதம் மாநில அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்ததை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் சேதுநாதன், மணிமாறன், செழியன் முன்னிலை வகித்தனர். இண்டியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். கண்டாச்சிபுரம் முகையூரில் ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் லுாயிஸ் வரவேற்றார். காங்., வாசிம்ராஜா, இந்திய கம்யூ., சவுரிராஜன், வி.சி., விடுதலை செல்வன், மா.கம்யூ., வேல்மாறன் உட்பட தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.