உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நுாறு நாள் வேலை கேட்டு பொதுமக்கள் மறியல்

 நுாறு நாள் வேலை கேட்டு பொதுமக்கள் மறியல்

வானுார்: நுாறு நாள் வேலை வழங்காத அரசை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் நுாறு நாள் வேலை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கிளியனுார் அடுத்த நல்லாவூர் கிராமத்தில் நுாறு நாள் வேலை சரிவர கொடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி பெண்கள் நேற்று காலை 10:30 மணியளவில் நல்லாவூர் - உப்புவேலுார் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், மனோகர் மற்றும் துணை பி.டி.ஓ., பச்சையப்பன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், நுாறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனையேற்று அனைவரும் 11:00 மணியளவில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை