உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் தொகை...  ரூ. 1,012 கோடி; இரு ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் பயன்

மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் தொகை...  ரூ. 1,012 கோடி; இரு ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் பயன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகள் மூலம், கடந்த இரு ஆண்டுகளில் ரூ. 1012 கோடி மதிப்பிலான விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 99 ஆயிரத்து 534 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விழுப்புரம் கமிட்டியில் கடந்த 2024 - 2025ம் ஆண்டில், 30 ஆயிரத்து 161 விவசாயிகள், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 390 குவிண்டால் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். திண்டிவனம் கமிட்டியில் 21 ஆயிரத்து 641 விவசாயிகள், 64 ஆயிரத்து 368 குவிண்டால் விளை பொருட்களையும், செஞ்சி கமிட்டியில் 53 ஆயிரத்து 784 விவசாயிகள், 6 லட்சத்து 72 ஆயிரத்து 562 குவிண்டால் விளை பொருட்களையும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதேபோல், அரகண்டநல்லுார் கமிட்டியில் 75 ஆயிரத்து 143 விவசாயிகள், 4 லட்சத்து 77 ஆயிரத்து 286 குவிண்டால் விளை பொருட்களையும், அவலுார்பேட்டை கமிட்டியில் 43 ஆயிரத்து 835 விவசாயிகள், 3 லட்சத்து 36 ஆயிரத்து 195 குவிண்டால் விளை பொருட்களையும், விக்கிரவாண்டி கமிட்டியில் 39 ஆயிரத்து 541 விவசாயிகள், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 413 குவிண்டால் விளை பொருட்களையும், மரக்காணம் கமிட்டியில் 45 விவசாயிகள், 140 குவிண்டால் விளை பொருட்களையும், வளத்தி கமிட்டியில் 217 விவசாயிகள், ஆயிரத்து 454 குவிண்டால் விளைபொருட்களையும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மாவட்டத்தில் கடந்தாண்டு மட்டும் மார்க்கெட் கமிட்டிகள் மூலம் ரூ.653 கோடி மதிப்பிலான 18 லட்சத்து 41 ஆயிரத்து 813 குவிண்டால் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 367 விவசாயிகள் பயனடைந்தனர். இதேபோல், கடந்த 2025 - 2026ம் ஆண்டில் (கடந்த ஏப்.1 ம் தேதி முதல் செப்.30 வரை) விழுப்புரம் கமிட்டியில் 12 ஆயிரத்து 221 விவசாயிகள், 62 ஆயிரத்து 62 குவிண்டால் விளை பொருட்களையும், திண்டிவனம் கமிட்டியில் 7 ஆயிரத்து 966 விவசாயிகள், 25 ஆயிரத்து 387 குவிண்டால் விளை பொருட்களையும், செஞ்சி கமிட்டியில் 31 ஆயிரத்து 223 விவசாயிகள், 4 லட்சத்து 72 ஆயிரத்து 676 குவிண்டால் விளை பொருட்களையும், அரகண்டநல்லுார் கமிட்டியில் 42 ஆயிரத்து 928 விவசாயிகள், 3 லட்சத்து 47 ஆயிரத்து 890 குவிண்டால் விளை பொருட்களையும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவலுார்பேட்டை கமிட்டியில் 22 ஆயிரத்து 171 விவசாயிகள், 2 லட்சத்து 38 ஆயிரத்து 241 குவிண்டால் விளை பொருட்களையும், விக்கிரவாண்டி கமிட்டியில் 18 ஆயிரத்து 459 விவசாயிகள், 82 ஆயிரத்து 437 குவிண்டால் விளை பொருட்களையும், மரக்காணம் கமிட்டியில் 16 விவசாயிகள், 7 குவிண்டால் விளை பொருட்களையும், வளத்தி கமிட்டியில் 183 விவசாயிகள், 33 குவிண்டால் விளைபொருட்களையும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரையில் மொத்தம் ரூ.359 கோடி மதிப்பிலான, 12 லட்சத்து 640 குவிண்டால் விளைபொருட்கள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 8 மார்க்கெட் கமிட்டிகள் மூலம் ரூ. ஆயிரத்து 12 கோடி மதிப்பிலான விளைபொருட்கள், கடந்த 2 ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 99 ஆயிரத்து 534 விவசாயிகள் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !