உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காந்தி நகரில் மழைநீர் தேக்கம்: மக்கள் அவதி

காந்தி நகரில் மழைநீர் தேக்கம்: மக்கள் அவதி

திண்டிவனம் : திண்டிவனம் காந்தி நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.திண்டிவனம் பகுதியில் தொடர் மழை பெய்யும் போது, மரக்காணம் சாலையில் காந்தி நகர், வகாப் நகர் பகுதியில் மழைநீர் சூழ்வது வழக்கமாக உள்ளது.காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் அனைத்தும் காந்தி நகர் வழியாக வருவதால், அங்குள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து வருவது குறித்து, பல முறை பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.தற்போதும் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் காந்தி நகர், வகாப்நகர் பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. மழை நீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மரக்காணம் ரோட்டிலுள்ள பிரதான வாய்க்காலில் அடைப்பு ஏற்பட் டுள்ளதால், மழைநீர் உள்வாங்கவில்லை. வாய்க்காலை ஆழப்படுத்தினால்தான் காந்தி நகரில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேறும் நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை