| ADDED : ஜன 23, 2024 05:16 AM
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் உள்ள ஸ்ரீராம் பள்ளியில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவும், சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளி தாளாளருக்கு நேற்று முன்தினம் கிளியனுார் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கடிதம் வந்தது. அதில், கலெக்டர் மற்றும் கோர்ட் முன்அனுமதி பெறாததால், விழா நடத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதற்கு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தனது 'டூவிட்டர்' பக்கத்தில், கண்டனம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கிளியனுார் போலீசார் அனுமதி மறுந்த ஸ்ரீராம் பள்ளியில் நேற்று காலை எவ்வித பிரச்னையின்றி கணபதி பூஜை, கணபதி ேஹாம், ஸ்ரீராமபிரான் விஷ்ணுசகஸ்ராம பாராயணம், பூர்ணாஹூதி, மந்திர பூஷ்பம, 54 கலசங்களுக்கு பூஜை மற்றும் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. நிகழ்ச்சியில் தென்கோடிப்பாக்கம் ஊராட்சி தலைவர் ராஜசேகர், பா.ஜ., மாநில விளையாட்டு அணி செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.