பா.ம.க., பொதுக்குழுவில் கண் கலங்கிய ராமதாஸ்
திண்டிவனம்: பா.ம.க.,சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் அன்புமணியை விமர்சனம் செய்த போது, ராமதாஸ் கண் கலங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா மண்டபத்தில், அன்புமணியை ஓரங்கட்டிவிட்டு, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, சமூக ஊடக பேரவை நிர்வாகி உள்ளிட்டோர் பேசும்போது, அன்புமணியை கடுமையான சொற்களை கொண்டு வசைபாடினர். அன்புமணி பற்றி கட்சி நிர்வாகிகள் பலரும் விமர்சித்து பேசியதை கேட்ட ராமதாஸ் திடீரென்று கண்கலங்கினர். இதனால், தொடர்ந்து, அன்புமணி பற்றி பேசுவதை நிர்வாகிகள் நிறுத்திக்கொண்டனர்.