உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அரசு கல்லுாரியில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை

விழுப்புரம் அரசு கல்லுாரியில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை

விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் தீயணைப்புத் துறை சார்பில், பேரிடர் மீட்பு குழு முன்னெச்சரிக்கை குறித்த ஒத்திகை நடந்தது.விழுப்புரம் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சிவசங்கரன் தலைமையில், முன்னணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் மற்றும் ஊர்தி குழுவினர் மாணவர்கள் முன்னிலையில், பேரிடர் மீட்பு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.விபத்து அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என செயல் முறை விளக்கம் செய்து காண்பித்தனர். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்