உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: எஸ்.ஐ.ஆர்., பணி நெருக்கடியை களையக் கோரி, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன், தலைவர்கள் வள்ளல்பாரி, மகேஷ்வரன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் லட்சுமணன் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்களை வாக்காளர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்று தேர்தல் பிரிவில் ஒப்படைக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் அவசரமாக இந்த பணிகளை முடிக்க நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பது உட்பட எஸ்.ஐ.ஆர்., பணியில் உள்ள பல்வேறு நெருக்கடியை களைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்