உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ரூ.556 கோடியில் சாலை பணிகள்: விழுப்புரம் மண்டலத்தில் ஜரூர்

 ரூ.556 கோடியில் சாலை பணிகள்: விழுப்புரம் மண்டலத்தில் ஜரூர்

- நமது நிருபர் - தமிழக நெடுஞ்சாலைத்துறை மூலம், விழுப்புரம் மண்டலத்தில் 556 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மற்றும் பாலம் பணிகள் நடந்து வருகிறது. தமிழக நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், கிராம சாலைகள் என 74 ஆயிரம் கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகிறது. விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலுார், விருத்தாச்சலம், அரியலுார் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 2025-2026ம் நிதி ஆண்டில், 556.39 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, வானுார் ஆகிய உட்கோட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் கோட்டத்தில், 72.25 கி.மீட்டருக்கு சாலை, உயர்மட்ட பாலம் மற்றும் சிறு பாலம் பணிகள் 170 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. கடலுார், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்டங்களை உள்ளடக்கிய கடலுார் கோட்டத்தில், 145 கோடி ரூபாய் மதிப்பிலான 93.39 கி.மீட்டர் சாலை பணிகளும், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய உட்கோட்டங்களை உள்ளடக்கிய விருத்தாச்சலம் கோட்டத்தில் 137 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான 90.99 கி.மீ., துார சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரியலுார், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய உட்கோட்டங்களை உள்ளடக்கிய அரியலுார் கோட்டத்தில், 61 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 51.20 கி.மீ., நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 307.83 கி.மீ., துார சாலைகள் விரிவாக்கம், அபிவிருத்தி செய்தல், மேம்பாலங்கள், சிறுபாலங்கள் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள், 514 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பபீட்டிற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன், திருக்கோவிலுார் தொகுதியில், மாரங்கியூர் உயர்மட்டப் பாலம் 42 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், இந்தாண்டு மொத்தம் 556 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளை திட்டமிட்டபடி விரைந்து முடிக்குமாறு, துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை