உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில கடற்கரை கையுந்து பந்து போட்டிக்கு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மாநில கடற்கரை கையுந்து பந்து போட்டிக்கு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

விழுப்புரம்: மாநில அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டிக்கு தேர்வான, விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.விழுப்புரம் மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டிகள், மரக்காணம் அடுத்த கைப்பானிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில், மாவட்டத்தில் உள்ள 8 குறு மையங்களில் வெற்றி பெற்று வந்த பள்ளி மாணவர்கள் அணிகள் பங்கேற்றனர். இதில், விழுப்புரம் அடுத்த மரகதபுரம் அரசு உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சந்துரு, ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டு, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சிறப்பாக விளையாடி, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதோடு, மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை, மரகதபுரம் அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுந்தரமூர்த்தி, மரியபிரான்சிஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி