உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பாலியல் பலாத்கார குற்றவாளியை கைது செய்யாவிட்டால் போராட்டம்: சண்முகம் எம்.பி., எச்சரிக்கை

 பாலியல் பலாத்கார குற்றவாளியை கைது செய்யாவிட்டால் போராட்டம்: சண்முகம் எம்.பி., எச்சரிக்கை

விழுப்புரம்: கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வானுார் தி.மு.க., ஒன்றிய செயலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., கூறினார். விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதல்வர் கும்பகர்ண துாக்கத்தில் உள்ளார். தமிழகத்தில் சிறுமிகள் பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்கார நிகழ்வு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. தி.மு.க., வானுார் ஒன்றிய பொறுப்பாளர் பாஸ்கரன், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இது குறித்து அப்பெண் கடந்த 6 நாட்களுக்கு முன்பு அளித்த புகார் மீது போலீஸ் மெத்தனமாக இருந்து வருகிறது. அப்பெண்ணை மிரட்டிய, துன்புறுத்தப்பட்ட பிரிவு எதுவும் சேர்க்கவில்லை. வெறும் 66 பிரி வை மட்டும் போலீசார் பயன்படுத்தியுள்ளனர். தி.மு.க., மாவட்ட செயலாளர் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று இவ்வழக்கை முடித்து வைக்குமாறு போலீசாருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பலாத்கார குற்றவாளி சுதந்திரமாக சுற்றி வருகிறார். அவர் மீது கிளியனுார் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல், பஞ்சமி நில மோசடி, தனியார் நிலம் மற்றும் குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தி.மு.க., தலைமை, குற்றவாளியை காப்பாற்றி கொண்டுள்ளது. வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அந்த பெண்ணிற்கு அழுத்தம் கொடுத்து மிரட்டி வருகின்றனர். தமிழக முதல்வர், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.க., சார்பில் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அ.தி.மு.க.,வில் இருந்து யாரும் வெளியேறவில்லை. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மனோஜ் பாண்டியன் அ.தி.மு.க.,வில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்